Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் ராணுவ வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்து

ஆர்காவ் கன்டோன் மெல்லிங்கன் புறவழிச்சாலையில் காரும் ராணுவ வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

240212 VUMellingen3 528x704 Copy
Quelle: Kantonspolizei Aargau
Bildquelle: Kantonspolizei Aargau
240212 VUMellingen2 528x396 1
Quelle: Kantonspolizei Aargau
Bildquelle: Kantonspolizei Aargau

30 வயதான டிரைவர்இ எதிரே வந்த இராணுவ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளார். வாகனம் ஓட்டும் போது தூங்கிவிட்டதனாலையே விபத்து நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதுடன் ராணுவ வீரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும் வாகனங்களுக்கு அதிகளவான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் காரணமாக பல மணி நேரம் சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கார் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button