Swiss News In Tamil

சூரிச் விமான நிலையத்தில் புதிய நடமுறை : பயணிகள் மகிழ்ச்சி

சூரிச் விமான நிலையத்தில் புதிய நடமுறை : பயணிகள் மகிழ்ச்சி விமான நிலையங்களில் கையில் கொண்டு செல்லும் பொதிகளில் திரவப்பொருட்கள் மற்றும் கூரியஆயுதங்கள் உள்ளே கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் சூரிச் விமான நிலையத்தில் உங்கள் கைப்பொதியில் இரண்டு லீட்டர் திரவத்தை எடுத்த செல்லமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடமுறை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

சூரிச் விமான நிலையம்

ஐரோப்பாவில் உள்ள பல விமான நிலையங்கள் கைப்பொதிகளில் அனுமதிக்கப்படும் திரவங்களின் அளவு மீது கடுமையான கட்டுப்பாடுகளை நீக்குகின்றன. இந்நிலையில் சூரிச் விமானநிலையத்தில் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய சி டி ஸ்கேனர்கள் மூலம் இந்த புதிய நடமுறை பின்பற்றப்படவிருக்கிறது.

புதிய சி டி ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் இடங்களில், பாதுகாப்பு சோதனைகள் மூலம் இரண்டு லிட்டர் வரை உள்ளடக்கம் கொண்ட பாட்டில்கள் கொண்டு வரப்படலாம். சூரிச் விமான நிலையம் இந்த தொழில்நுட்பத்தை விரைவில் பயன்படுத்த உள்ளது.

முதல் கட்டமாக ‘புதிய சாதனங்களுடன் சோதனைகளுக்கு இரண்டு புதிய கட்டுப்பாட்டு பாதைகள்’ அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button