Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மகளை கடித்த தாய்க்கு போலீசார் அபராதம்

சுவிட்சர்லாந்தில், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என மகள் அடம்பிடித்ததால் ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மகளைக் கடித்த தாய்

சுவிட்சர்லாந்தின் Schwyz மாகாணத்தில் வசிக்கும் ஒரு 19 வயது இளம்பெண், இசை நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்லவேண்டும் என அடம்பிடிக்க, அவருக்கும் அவரது தாய்க்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

wppi image polizei newsKapo SG 97 994x550 1

தாயைத் தள்ளிவிட்டு மகள் வெளியேற முயல, கடுங்கோபமடைந்த அந்தத் தாய், மகளுடைய கையைப் பிடித்து பலமாகக் கடித்துள்ளார்.

அந்த இளம்பெண் அணிந்திருந்த ஜாக்கெட், சட்டையைத் தாண்டி அவளது கையில் காயம் ஏற்பட, பொலிசில் புகாரளித்துள்ளார் அவர்.

அந்தத் தாய் மகளைத் தாக்கியதாக முடிவு செய்துள்ள நீதிமன்றம், அவர் பெரும் தொகை ஒன்றை அபராதமாக செலுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Back to top button