Swiss News In Tamil

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்கள்

லுசேர்ன் A2 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்கள் செவ்வாய்க்கிழமை காலை கன்டோன் லுசேர்ன் ஆ 2 நெடுஞ்சாலையில் சோனன்பேர்க் சுரங்கப்பாதையில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 6:45 அளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து காரணமாக காலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

wppi image polizei news24 04 16 Sempach 01 994x550 1
Lucerne Police

எனினும் பொருள் சேதம் சுமார் 40,000 பிராங்குகள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை நேற்றைய தினமும் குறித்த நெடுஞ்சாலையில், செம்பாக் வெளியேறும் பகுதியில் டெலிவரி டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழiமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

wppi image polizei news24 04 16 Sempach 01 994x550 1

Related Articles

Back to top button