Swiss News In Tamil

வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்க திட்டமிட்டுவரும் சுவிஸ் மாகாணம்

சுவிஸ் மாகாணம் ஒன்று, வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்க திட்டமிட்டுவருகிறது.

வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை

சுவிஸ் மாகாணமான Appenzell Ausserrhoden, வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

மாகாண கவுன்சிலில் இந்த விடயம் தொடர்பான பிரேரணை முதல் சுற்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி, முதல் சுற்றில் அது வெற்றியைப் பெற்றுள்ளது.

விடயம் என்னவென்றால், பிரச்சினை சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்புடன் முடிந்துவிடவில்லை, மாகாணத்திலுள்ள அனைத்து முனிசிபாலிட்டிகளும் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த பிறகுதான், அது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

பொதுமக்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தால், வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் சுவிஸ் மாகாணம் என்னும் பெருமை, சுவிஸ் மாகாணமான Appenzell Ausserrhodenக்குக் கிடைக்கும்.

Related Articles

Back to top button