Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் அறிமுகமாகும் அதிநவீன தொடர்பாடல் வசதி

சுவிட்சர்லாந்தில் அதி நவீன தொடர்பாடல் வசதியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உலக செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்கின் ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் செய்மதி ஊடான தொலைதொடர்பு சேவைகள் வழங்கப்பட உள்ளன.

சுவிட்சர்லாந்தின் முன்னணி தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான சால்ட் நிறுவனம் இந்த புதிய செய்மதி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

செயற்கைகோள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் சேவை வழங்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தில், அதிநவீன தொடர்பாடல் வசதி

4ஜீ வலையமைப்பினை பயன்படுத்தக் கூடிய அலைபேசிகளில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை கோளின் உதவியுடன் தொடர்பாடல் செய்யக்கூடிய புதிய தொழில்நுட்பம் சுவிட்சர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எந்தவொரு பகுதியிலிருந்தும் தொடர்பாடல் மேற்கொள்ளப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்காக மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை என்பதுடன் புதிய அலைபேசிகளை கொள்வனவு செய்யவும் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button