Local Swiss News

சூரிச் முதன்மை ரயில் நிலையத்தில் பயணியின் பையைத் திருடிய இருவர் கைது!

சூரிச் முதன்மை ரயில் நிலையத்தில் பயணியின் பையைத் திருடிய இருவர் கைது!

6 8

கடந்த நவம்பர் 21 சனிக்கிழமை பிற்பகல், பாசலிலிருந்து சூரிச் சென்ற ரயிலில் பயணியின் பையைத் திருடிய 31 மற்றும் 32 வயதுடைய இரு அல்ஜீரிய நாட்டவர்களைச் சூரிச் நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சூரிச் முதன்மை ரயில் நிலைய நடைமேடையில் திருடர்கள் பையைச் சோதனையிடுவதைக் கண்ட அதன் உரிமையாளர், காவல்துறைக்குத் தகவல் அளித்ததுடன் அவர்களை ரகசியமாகப் பின்தொடர்ந்தார். விரைந்து வந்த காவல்துறையினர் சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டதில், திருடப்பட்ட பையிலிருந்த அணிகலன்களை அவர்கள் அணிந்திருந்தது கண்டறியப்பட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் பயணிகள் தங்களது உடைமைகளைக் கவனமாகப் பாதுகாக்குமாறு சூரிச் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.