Local Swiss News

அகதிகள் தங்குமிடத்தில் காவல்துறை நடவடிக்கையின்போது மோதல்! – ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் அகதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

அகதிகள் தங்குமிடத்தில் காவல்துறை நடவடிக்கையின்போது மோதல்! – ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் அகதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.

1 7

சுவிட்சர்லாந்தின் வலே (Valais) மாகாணம் வீஸ்ப் (Viège) நகரில் உள்ள அகதிகள் தங்குமிடத்தில் திங்கட்கிழமை பிற்பகல் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஒரு காவல்துறை அதிகாரியும், அங்கு தங்கியிருந்த ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரைக் கைது செய்து, சியோன் (Sion) நகரில் உள்ள நாடு கடத்தல் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக மாலை 3:30 மணிக்குச் சற்று முன்னதாகக் காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.

எனினும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சம்பவத்தில் காவல்துறை அதிகாரியும், அந்த நபரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், இருவரும் சிகிச்சைக்காக சியோன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

காயங்கள் ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் குறித்து வலே மாகாண அரசு வழக்கறிஞர் அலுவலகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.