பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பது துஷ்பிரயோகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்! – டிசினோ (Ticino) மாநில நாடாளுமன்றத்தில் பரிசீலனை.

சுவிட்சர்லாந்தின் டிசினோ (Ticino) மாநிலத்தில், பெற்றோர் பிரிவின்போது பிள்ளையை ஒரு பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிப்பதைக் குழந்தைத் துஷ்பிரயோகமாக அங்கீகரிக்கக் கோரி ‘அக்னா’ (AGNA) பெற்றோர் சங்கம் மாநில நாடாளுமன்றத்தில் அளித்த மனு தற்போது சட்டக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய குழந்தை மனநல நிபுணர், இது பிள்ளைகளுக்கு நீண்டகால மனநலப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை என எச்சரித்துள்ளார்.
இதற்குத் தீர்வாக, பிள்ளையும் ஒதுக்கப்பட்ட பெற்றோரும் சமூக சேவை அலுவலகங்களுக்குப் பதிலாக நடுநிலையான இடங்களில் நிபுணர்களின் உதவியுடன் சந்திக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது குடும்ப வன்முறைகளை மறைக்கும் சாக்காகப் பயன்படுத்தப்படலாம் என்ற மாற்றுக் கருத்துக்களும் நிலவுகின்றன.



