மருத்துவமனைகளில் பரவும் ஆபத்தான பாக்டீரியாக்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை! – லோசான் பல்கலைக்கழக மருத்துவமனையில் வாராந்திரப் பரிசோதனை கட்டாயம்.
உலக ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு வாரம் புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமிகள் மருத்துவமனைகளில் பரவுவதைத் தடுக்க லோசான் பல்கலைக்கழக மருத்துவமனை (CHUV) கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுவிஸ் அரசின் புதிய அறிக்கையின்படி, இத்தகைய கிருமிகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளதுடன், ஆண்டுதோறும் சுமார் 60,000 நோயாளிகள் மருத்துவமனைத் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த, CHUV-இன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து நோயாளிகளிடமும் வாரந்தோறும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நான்கு வகையான ஆபத்தான கிருமிகள் உள்ளனவா எனப் பரிசோதிக்கப்படுகிறது.
கிருமித் தொற்று கண்டறியப்படும் நோயாளிகள் உடனடியாகத் தனி அறையில் வைக்கப்படுவதோடு, பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், சிங்க் குழாய்கள் உட்பட மருத்துவமனை முழுவதும் தீவிர கிருமி நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்தில் ஆன்டிபயாட்டிக் பயன்பாடு குறைவாக இருந்தாலும், மருத்துவர்கள் தேவையானபோது மட்டுமே இம்மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும் என சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகம் (OFSP) வலியுறுத்தியுள்ளது.



