Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் பிரமாண்ட தமிழ் இசை இரவு!

சுவிட்சர்லாந்தில் பிரமாண்ட தமிழ் இசை இரவு!

சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில், AGP Presents – Tamil Dream Night 2026 என்ற பிரமாண்ட இசை நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தியாவின் பிரபல இசை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான முன்னணி பாடகர்களும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தமிழ் பாடகர்களும் ஒரே மேடையில் இணைந்து தங்களது இசைத் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்த இசை இரவில், Karthik Devaraj, Haripriya, Sridar Sena மற்றும் Pooja Venkat ஆகிய முன்னணி கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ரசிகர்களுக்கு இசை விருந்தளிக்கவுள்ளனர்.

Tamil Dream Night News 1024x581 1

அத்துடன், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Shrijan Sivathas, Shrijan Srila மற்றும் Thaanika ஆகிய பாடகர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்ச்சியை Nigitha Reegan மற்றும் Kavithran ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளதுடன், Ashmika Rajanikanth அவர்களின் சிறப்பு வரவேற்பு நடனமும் நிகழ்வுக்கு மேலும் களைகட்டவுள்ளது.

இந்த நிகழ்வின் விளம்பர அனுசரணையாளர்களாக Lamelle Glass, Raaniyan Video, Madras Dosa, LetsGoTravels, Aiya Restaurant மற்றும் TamilPrint ஆகிய நிறுவனங்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளன.

தமிழ் இசை, பாடல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு எனப் பல்வேறு அம்சங்களுடன் நடைபெறவுள்ள Tamil Dream Night 2026, சுவிட்சர்லாந்து வாழ் தமிழ் மக்களுக்கு மறக்க முடியாத இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்தப் பிரமாண்ட இசை நிகழ்வில் SwissTamilTv உத்தியோகபூர்வ ஊடகப் பங்காளராக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.