Local Swiss News

பெண்ணை சுட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர் மரணம்! விசாரணை முடிவுக்கு வந்தது!

29P 1111

பெண்ணை சுட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர் மரணம்! விசாரணை முடிவுக்கு வந்தது!

லூசெர்ன் நகரின் எஸ்கோல்ஸ்மாட் Escholzmatt பகுதியில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற பெண் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டு மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

37 வயதான உக்ரேனியப் பெண் ஒருவர், ஜூன் 22ஆம் தேதி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

29P 1111

அவருடன் படுகாயமடைந்த ஆண் ஒருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 35 வயதான ஆப்கானிய நபர் ஒருவர் சந்தேகநபராகக் கருதப்பட்டார்.

சம்பவத்தின் பின்னர் அவர் படுகாயமடைந்த நிலையில் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், குற்றவியல் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அந்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக லூசெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவர் துப்பாக்கியால் அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்ற பின்னர், தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அரசுத் தரப்பு விசாரணையை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரிகளின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் வெளியாகலாம்.