Swiss News In Tamil

ஆல்ப்ஸ் மலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

ஆல்ப்ஸ் மலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்

ஆல்ப்ஸ் மலையில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்: சுவிஸ் கிராமங்களுக்கு நிலச்சரிவு ஆபத்து பெருக்கம்
புவி வெப்பமயமாதல் காரணமாக ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய பனிப்பொழிவு இல்லாததால் சுற்றுலா தளங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது பனி உருகுவதால் உருவாகும் பிளவுகள் மலையேற்றப் பயணிகளுக்கும், மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கும் கடும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்தின் பிளாட்டன் கிராமத்தில் மலையிலிருந்து பாறைகளும் பனியும் சரிந்து வந்து பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தின. அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்து மக்களை வெளியேற்றியதால் அப்போது பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அதே போன்றதொரு நிலச்சரிவு ஆபத்து தற்போது கேண்டர்ஸ்டெக் எனும் சுவிஸ் கிராமத்திற்கும் உருவாகியுள்ளது.
clariden 100
மலைப் பகுதிகளில் மண், பாறை மற்றும் பனி ஆகியவை தொடர்ந்து பூஜ்யம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உறைந்து ஒன்றாகக் இறுகி நிற்பதை ‘பெர்மாஃப்ரோஸ்ட்’ என்று அழைப்பர். ஆனால் தற்போதைய பருவநிலை மாற்றத்தால் வெப்பநிலை உயர்ந்து இந்த பனி உருகும்போது, பாறைகளுக்கு இடையேயான பிடிப்பு தளர்ந்து பிரம்மாண்ட நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
தற்போது கேண்டர்ஸ்டெக் பகுதியில் உடனடியாக ஆபத்து இல்லை என்றாலும், ஜிபிஎஸ் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அதிகாரிகள் அப்பகுதியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர். அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், நாற்பத்து எட்டு மணி நேரத்திற்கு முன்பாக மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button