Swiss News In Tamil

சுவிஸ்தமிழ் டிவி – வெற்றிகரமான 3 ஆண்டுகள்

9f608261 54d7 4853 ba5f ecf5fd46a047

சுவிஸ்தமிழ் டிவி – வெற்றிகரமான 3 ஆண்டுகள்

சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய ஊடகமாக திகழும் SwissTamilMedia நிறுவனத்தின் SwissTamilTv வலையொலி இன்று தனது 3ஆம் ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து முழுவதும் வாழும் தமிழர்களுக்கு உடனடி செய்திகள், சமூக நிகழ்வுகள், சிறப்பு நேர்காணல்கள், கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வணிக தகவல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை தரமான முறையில் வழங்கி வருகிறது.

இந்த மூன்று ஆண்டுகால பயணத்தில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பார்வையாளர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் எங்களுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் SwissTamilTV தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

9f608261 54d7 4853 ba5f ecf5fd46a047

வரும் காலங்களிலும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றை முன்னிறுத்தி, Swiss தமிழர்களை இணைக்கும் முன்னணி தமிழ் டிஜிட்டல் ஊடகமாக மேலும் பல புதிய முயற்சிகளுடன் பயணிக்க SwissTamilTV உறுதியளிக்கிறது.

எங்கள் வளர்ச்சியின் அடித்தளம் எங்கள் பார்வையாளர்களே. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களின் மிகப்பெரிய பலம்.

SwissTamilTV-யின் 3ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அனைத்து பார்வையாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

“மூன்று ஆண்டுகள் நம்பிக்கையுடன்… இனியும் உங்களுடன்!” 🇨🇭📺🎉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *