Local Swiss News

மது போதையில் விமானம் இயக்க முயன்ற சுவிஸ் விமானிகள்! புறப்படுவதற்கு முன்பே அதிரடி நடவடிக்கை!

மது போதையில் விமானம் இயக்க முயன்ற சுவிஸ் விமானிகள்! புறப்படுவதற்கு முன்பே அதிரடி நடவடிக்கை!

மது போதையில் விமானம் இயக்க முயன்ற சுவிஸ் விமானிகள்! புறப்படுவதற்கு முன்பே அதிரடி நடவடிக்கை!

சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு விமானிகள், மது போதையில் விமானத்தை இயக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு புறப்படவிருந்த ஏர்பஸ் A220 விமானத்தை இயக்குவதற்காக வந்த இந்த இரண்டு விமானிகளும், முந்தைய இரவு அதிகளவில் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்கள், இருவரும் வெளிப்படையாக மது போதையில் இருந்ததை கவனித்து உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு மதுபானப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவர்கள் விமானம் இயக்கத் தகுதியற்ற நிலையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனால், விமானம் புறப்படுவதற்கு முன்பே இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், மாற்று விமானிகள் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22J 6

விமான நிறுவனத்தின் விதிகளின்படி, விமானிகள் பணியில் சேரும் முன் மது அருந்தக் கூடாது. பல நிறுவனங்கள் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே மதுவிலக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற கடுமையான நடைமுறையையும் பின்பற்றுகின்றன.

இந்தச் சம்பவத்தில், அந்த இரண்டு விமானிகளும் எந்த நேரத்திலும் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்குள் செல்லவில்லை என்பதால் பயணிகளின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இரு விமானிகளும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button