சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ விதிக்க முன்மொழிவு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ விதிக்க முன்மொழிவு

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ விதிக்க முன்மொழிவு
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு புதிய “பாதுகாப்பு வரி” ஒன்றை அறிமுகப்படுத்தும் முன்மொழிவை தேசிய சபை (National Council) வியாழக்கிழமை ஆதரித்துள்ளது.
இந்த யோசனையை சுவிஸ் மக்கள் கட்சி (SVP) முன்வைத்துள்ளது. முன்மொழிவின் படி, சுவிஸ் இராணுவ சேவையில் ஈடுபடாத ஆண்கள் தற்போது செலுத்தும் இராணுவ சேவை விலக்கு வரியைப் போன்ற முறையில் இந்த பாதுகாப்பு வரியும் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வரி தொகை எவ்வளவு செலுத்த வேண்டும், எத்தனை ஆண்டுகள் செலுத்த வேண்டும் போன்ற விதிமுறைகள் தற்போதைய இராணுவ சேவை விலக்கு வரி முறைமையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படலாம்.

இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள், சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் பொது சேவைகளுக்கான செலவுகளில் வெளிநாட்டு குடியிருப்பாளர்களும் பங்களிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஆனால், இந்த முன்மொழிவு அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சகர்கள் இதை வெளிநாட்டவர்களை குறிவைக்கும் நடவடிக்கையாக பார்க்கின்றனர்.
தேசிய சபையில் ஆதரவு கிடைத்துள்ள இந்த யோசனை இன்னும் சட்டமாக அமலுக்கு வரவில்லை. இதற்காக மாநிலங்களவை (Council of States) அனுமதியும் அவசியமாகும்.






