Swiss News In Tamil

லௌசானில் குப்பை சேகரிப்பு லாரி மோதி 72 வயது பெண் உயிரிழப்பு

லௌசானில் குப்பை சேகரிப்பு லாரி மோதி 72 வயது பெண் உயிரிழப்பு

வோ கன்டோனின் லௌசான் (Lausanne) நகரில் இடம்பெற்ற விபத்தில் 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குப்பை சேகரிப்பு லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக “வோ கன்டோனல் போலீசார்” தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும், வோ கன்டோனில் வசித்து வந்தவர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

N2 4

இந்த விபத்து திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு முன்பாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து துல்லியமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

குப்பை சேகரிப்பு லாரியை ஓட்டிய 54 வயதுடைய பல்கேரிய நாட்டவர், அந்தப் பிராந்தியத்தில் வசித்து வருபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துக்குப் பின்னர் அவர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக வோ கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

® Kapo D