Swiss News In Tamil

அரோமட் சுவிட்சர்லாந்திலேயே தொடர வேண்டும் என மனு

அரோமட் சுவிட்சர்லாந்திலேயே தொடர வேண்டும் என மனு

பல தலைமுறைகளாக சுவிட்சர்லாந்து மக்களின் உணவு மேசையில் இடம்பிடித்திருக்கும் Aromat தற்போது நாட்டின் அடையாளத்துடன் இணைந்த ஒரு சின்னமாகவே கருதப்படுகிறது. ஆனால், இந்த பிரபல உணவுப் பொருளின் “சுவிஸ் தன்மை” மெதுவாக குறைந்து வருவதாக கவலை எழுந்துள்ளது.

இப்போது Knorr தயாரிக்கும் அரோமட், Unilever நிறுவனத்தின் கீழ் உள்ளது. இருந்தபோதிலும், இதுவரை இது சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹாவ்சன் கன்டோனில் உள்ள தாய்ன்கென் பகுதியில் தயாரிக்கப்பட்டு வந்தது.

ஆனால், யூனிலீவரின் உணவு பிரிவும் McCormick & Company நிறுவனமும் இணையும் திட்டம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அரோமட் தயாரிப்பு சுவிட்சர்லாந்தை விட்டு வெளியே மாற்றப்படக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இது நிகழ்ந்தால் தாய்ன்கென் பகுதியில் பணிபுரியும் சுமார் 180 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

n10 1

இந்த நிலையில், “Aromat belongs to Switzerland” என்ற பெயரில் ஒரு மனு தொடங்கப்பட்டுள்ளது. அரோமட் தயாரிப்பை வெளிநாட்டிற்கு மாற்றுவதைத் தடுக்க 10,000 கையெழுத்துகளை சேகரிக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ளூர் தயாரிப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு வலுத்துவரும் சூழலில், இந்த மனு பொதுமக்களிடையே நல்ல ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button