சுவிட்சர்லாந்தில் பள்ளிகள் மூடப்படும் நிலை: பெற்றோர்கள் எதிர்ப்பு அதிகரிப்பு சுவிட்சர்லாந்து முழுவதும் பல பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகி வரும் நிலையில், சூரிச் கன்டோனின் ஹின்வில் (Hinwil) நகராட்சியில் உள்ள 170 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பள்ளியை காப்பாற்ற பெற்றோர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். உன்டர்பாக் (Unterbach) பள்ளி கட்டிடம் புதுப்பிப்பு செலவு 7 இலட்சம் சுவிஸ் ஃப்ராங்க்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அதை மூடுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் வழக்கை Federal Supreme Court of Switzerland வரை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. நாடு முழுவதும் பிறப்பு விகிதம் குறைவு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் புதிய விதிமுறைகள் ஆகிய காரணங்களால் பல பள்ளிகள் மூடப்படுகின்றன. ஒப்வால்டன் கன்டோனின் மெல்க்தால் (Melchtal) பகுதியில் உள்ள ஒரு கிராமப்பள்ளியும் மூடப்பட உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்கள் இடமாற்றம் செய்வதைப் பற்றியும் சிந்தித்து வருகின்றனர். அதேபோல் Thun நகரில், பணியாளர் விதிமுறைகள் காரணமாக ஒரு டேக்கேர் குழு கலைக்கப்பட்டுள்ளதுடன், இன்னொரு ஆரம்பப்பள்ளி தற்போது காலியாக உள்ளது. குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவதால், பல நகராட்சிகள் பள்ளிகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருகின்றன. இது எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் கல்வி அணுகுமுறையையும் சமூக வாழ்வையும் பாதிக்கக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. Blick