Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் வேடிக்கையான போலீஸ் சம்பவங்கள்: சிரிப்பும் ஆச்சரியமும் கலந்த கதைகள்!

சுவிட்சர்லாந்தின் வேடிக்கையான போலீஸ் சம்பவங்கள்: சிரிப்பும் ஆச்சரியமும் கலந்த கதைகள்!

வணக்கம் அன்பு பார்வையாளர்களே! இன்று நமது “தகவல் அறிவோம்” நிகழ்ச்சியில், சுவிட்சர்லாந்து போன்ற அமைதியான நாட்டிலும் சில சமயங்களில் போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் சிரிப்பையும் ஆச்சரியத்தையும் வரவழைக்கும் விதமாக அழைக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த சில அசாதாரணமான, சில சமயம் வேடிக்கையான தலையீடுகளை பற்றி பார்க்கப்போகிறோம். இவை உங்களை சிரிக்க வைப்பதோடு, “இது உண்மையாகவா?” என்று ஆச்சரியப்பட வைக்கும்!

முதலில், ஒரு பழங்கால மணற்கல் தூணின் “திருட்டு”!

ஐன்சிடெல்ன் நகரில் ஒரு அழகிய மணற்கல் தூண் திருடப்பட்டதாக புகார் வந்தது. போலீஸார் விசாரித்தபோது  – அது திருட்டே அல்ல! பழமை மீட்டமைப்புப் பணிகளுக்காகவே அந்தத் தூண் அகற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

அடுத்து, போலீஸாருக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கை! :- சுவைஸ் மாகாணத்தில் ஒரு பெண், போலீஸாரை அழைத்து, தனது வீட்டுக்கு ஒரு கனமான மேசையைத் தூக்கி வைக்க உதவி கேட்டார். நான்கு போலீஸாராவது தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆனால் போலீஸார் சிரித்துக்கொண்டே அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்!

ஆராவ் நகரில் ஒரு பெரிய “வெடிப்பு சம்பவம்”!  :- செப்டம்பரில் ஒரு 55 வயது மனிதர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, தனது பெரிய காற்று மெத்தையில் படுத்துக்கொண்டார். ஆனால் அது காற்றிழந்து போயிருந்தது. உடனே மின்சார பம்பை இயக்கினார். திடீரென மெத்தை வெடித்துச் சிதறியது! வெடிப்பின் சக்தி அவ்வளவு பெரியதாக இருந்தது – அறையே சேதமடைந்தது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, சுவற்றில் விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சூரிச் நகரின் கிரெய்ஸ் 4 பகுதியில் இரவு நேர “துப்பாக்கி” அச்சுறுத்தல்!  :- சூரிச் நகரின் கிரெய்ஸ் 4 பகுதியில் ஒரு கியோஸ்க் அருகே ஒரு பெண் இடுப்பில் துப்பாக்கி வைத்திருப்பதாக தகவல் வந்தது. போலீஸார் முழு தயார்நிலையில் விரைந்தனர். போலீஸ் பேச்சாளர் கூறுகையில், “குழுவினர் தயாராகத்தான் சென்றனர்.” ஆனால் அது உண்மையான துப்பாக்கி அல்ல – துப்பாக்கி வடிவிலான மொபைல் போன் கவர் மட்டுமே!

Whisk b89769c0dfefb9c9257482e14c01a13cdr

ஷாஃப்ஹவுசென் நகரில் ஒரு இனிப்பான விபத்து!  :- செப்டம்பரில் இரு கார்கள் மோதிய விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ஒரு சிறப்பு சேதம் – பயணிகள் இருக்கையடியில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் கேக் மோதலின் சக்தியால் முன்னால் தூக்கி எறியப்பட்டு, காருக்குள் ஒரு பெரிய இனிப்புக் குழப்பத்தை ஏற்படுத்தியது!

சூரிச்சில் “வாயு கசிவு” அலாரம்! :- ஒரு உணவுப் பொருட்கள் கடையில் வாயு நாற்றம் வருவதாக தகவல் வந்ததும் போலீஸும் ஆம்புலன்ஸும் விரைந்தனர். ஆபத்து எதுவும் இல்லை – காரணம்? கடை முன்பு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த டூரியன் பழம் புளித்துப் போய் அந்தக் கடுமையான வாசனையை வீசியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் “பழங்களின் ராஜா” என்று போற்றப்படும் டூரியன், அதன் நாற்றத்திற்கு பிரபலம் தானே? தமிழர்களுக்கு இது நன்கு தெரிந்த ஒன்று!

வில்லெனூவ் பகுதியில் ஒரு (Python)பைத்தான் ஆச்சரியம்! :- ஒரு தம்பதி தங்கள் வீட்டு மாடிப்படியில் பளபளப்பான ஒரு “பொம்மையை” பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அது நகர்ந்த பின்னர்தான் உண்மை புரிந்தது – உண்மையான Royal Python Snake! தீயணைப்பு வீரர்கள் வந்து அதைப் பிடித்தனர். அது யாருடைய பிரிய பிராணியோ தப்பியிருந்தது.

இறுதியாக, ஒரு 600 கிலோ காளையின் தப்புதல்! :- நியூசாட்டல் மாகாணத்தின் மொன்டல்செஸ் அருகே ஒரு பெரிய காளை மாடு வேலியை உடைத்து ஓடியது. பீதி பரவியது – அலர்ட்ஸ்விஸ் செயலி மூலம் எச்சரிக்கை, போலீஸார், ராணுவ ஹெலிகாப்டர் வரை தேடுதல்! மறுநாள்? அது அமைதியாக மற்ற மாடுகளோடு மேய்ந்து கொண்டிருந்தது!

இது போன்ற சம்பவங்கள் சுவிட்சர்லாந்தின் அன்றாட வாழ்க்கையில் அரிதாகவே நிகழ்வதால், அவை செய்திகளில் இடம்பிடிக்கின்றன. இவை நமக்கு ஒரு புன்னகையை வரவழைத்தாலும், அவசர சேவைகளின் விழிப்புணர்வையும் பொறுப்பையும் காட்டுகின்றன. இவ்வளவு வேடிக்கையான கதைகளுடன் இன்றைய நிகழ்ச்சி முடிவடைகிறது. அடுத்த வாரம் மேலும் சுவாரஸ்யங்களுடன் சந்திப்போம்! நன்றி, வணக்கம்!

Related Articles

Back to top button