Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் சுவிஸ் தமிழர் 25 வது தடவையாக வழங்கும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026

சுவிட்சர்லாந்தில் சுவிஸ் தமிழர் 25 வது தடவையாக வழங்கும் புத்தாண்டும் புதுநிமிர்வும் 2026

சுவிஸ் தமிழர் சமூகத்தின் முக்கியமான பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றான புத்தாண்டும் புதுநிமிர்வும் 25வது தவையாக ஜனவரி 1ஆம் தேதி வியாழக்கிழமை சுவிட்சர்லாந்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழா பிற்பகல் 3.00 மணி முதல் Dietikon (டியேடிகோன்) நகரில் உள்ள Stadthalle Dietikon (ஸ்டாட்தாலே டியேடிகோன்), இல் Fondlistrasse 15, 8953 Dietikon சூரிச் என்ற முகவரியில் நடைபெறுகிறது.

விழாவில் சுவிஸ் தமிழர் சமூகத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இசை, பாடல், நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தமிழர் பாரம்பரியமும் ஒற்றுமையும் மேடையேறும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தாண்டு விழாவில் இலங்கை மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த பிரபல பாடகர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். Sarangi Live Music Band (சாரங்கி லைவ் மியூசிக் பேண்ட்) வழங்கும் இசை நிகழ்ச்சி விழாவின் முக்கிய அம்சமாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன.

STCC Newyear 2026 11 page 0001 scaled e1767192641210

இந்த நிகழ்ச்சியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளதுடன், பல்வேறு தமிழ் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவுடன் இடம்பெறுகின்றது. பிரதான ஊடக அணுசரணையாக சுவிஸ் தமிழ் ஊடகத்தின் சார்பில் SwissTamilTv தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. சுவிஸ் தமிழர்களின் அடையாளம், ஒற்றுமை மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த 25வது ஆண்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.

குறித்த நிகழ்வில் சீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப வெற்றியாளர் கில்மிசா, சுப்பர் சிங்கர் போட்டியாளர் பாலாஜி, எழுச்சிக்குயில் தாணிகா, காணக்குயில் கனிசா ஆகியோர் சினிமா மற்றும் எழுச்சிப்பாடல்களை பாடவுள்ளனர். இது மாத்திரமின்றி லீஸ்ட்டால் ரமேஸ் நாடகக்குழுவினர் வழங்கும் நகச்சுவையுடன் கூடிய விழிப்புணர்வு மேடை நாடகமும் அரங்கேற காத்திருக்கிறது.

அரங்கத்தின் நிகழ்ச்சித்தொகுப்பாளர்களாக திரு: கவிதரன் அவர்களும் திருமதி : சர்விகா ரஜீஷன் அவர்களும் தமது வழக்கமான பாணியில் திறம்பட மேற்கொள்ளவிருக்கின்றனர்.

நுழைவுக் கட்டணம் 15 சுவிஸ் ஃப்ராங்குகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்பங்களுடன் வந்து புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். புத்தாண்டை தமிழ்ச் சுவையுடன், இசை மற்றும் மகிழ்ச்சியுடன் தொடங்கும் இந்த விழா, சுவிஸ் தமிழர்களுக்கு நினைவில் நிற்கும் ஒரு நாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Back to top button