Swiss News In Tamil

அமெரிக்க சுங்க வரிகள் சுவிஸ் தொழில் நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சி

அமெரிக்க சுங்க வரிகள் சுவிஸ் தொழில் நிறுவனங்களுக்கு கடும் அதிர்ச்சி

அமெரிக்கா சுவிஸ் பொருட்களுக்கு 39% சுங்கவரி விதித்தது வெறும் இரண்டு வாரங்களிலேயே, சுவிஸ் நிறுவனங்கள் அதன் தீவிர விளைவுகளை உணர தொடங்கியுள்ளன.

தற்போது, சுமார் 10% நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியை முழுமையாக நிறுத்தியுள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை குறைக்கும் நிலைமையிலும் சிலர் தங்கள் தொழிற்சாலைகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மாற்றிக் கொள்ளும் எண்ணத்திலும் உள்ளனர்.

68a19dc93a19a

Swissmechanic எனும் தொழில் சங்கம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, இயந்திரம், மின்சாதனங்கள் மற்றும் உலோக உற்பத்தி துறைகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலைமை மேலும் கடுமையானது. காரணம், இந்த வாரம் அமெரிக்க சுங்கத்துறை 400-க்கும் மேற்பட்ட உற்பத்தி கூறுகளை மீள வகைப்படுத்தி, அதன் மீது 50% வரை சுங்க வரி விதித்துள்ளது.

இதனால் சுவிஸ் தொழில் நிறுவனங்கள் கடுமையான அழுத்தத்தையும், எதிர்காலத்திற்கான பெரும் அச்சத்தையும் எதிர்கொண்டு வருகின்றன.

@WRS

Related Articles

Back to top button