Swiss News In Tamil

சுவிஸில் அவசர மருத்துவ பிரிவு கட்டணத் திட்டத்தை நிராகரிக்க அரசு பரிந்துரை

சுவிஸில் அவசர மருத்துவ பிரிவு கட்டணத் திட்டத்தை நிராகரிக்க அரசு பரிந்துரை

சுவிஸ் நாடாளுமன்றம், மருத்துவமனைகளின் அவசர பிரிவுகளில் (Emergency Departments) குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நோயாளிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இந்தக் கட்டணத்தின் நோக்கம், அவசர பிரிவின் பணிச்சுமையை குறைத்து, அவற்றின் முக்கிய செயல்பாடுகளை திறம்பட நடத்துதல் என்பதாகும். பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையற்ற மற்றும் அவசரமற்ற (non-urgent) வழக்குகளுக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க இந்தக் கட்டணம் உதவும் என்று வாதிடுகின்றனர்.

ஆனால், கூட்டாட்சி அரசு (Federal Council) செவ்வாயன்று வெளியிட்ட தனது அறிக்கையில், இந்த முன்மொழிவு செயல்திறன் வாய்ந்ததாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.

76c73712a5e1f5d3fae76f13b18617ac195e1d35 89865534
Keystone-SDA

இப்படியான கட்டணம் அறவிடப்படுவதால் கூடுதல் நிர்வாகப் பணிகள் மற்றும் மேலதிகச் செலவுகள் உருவாவதோடு, நோயாளிகளை தடுக்கும் விளைவு மிகக் குறைவு ஆக இருக்கும்.  மேலும் அவசரப் பிரிவுகளில் உண்மையான பணிச்சுமை குறைவு ஏற்படாது என அரசு வலியுறுத்தியது.

இதனால், கூட்டாட்சி அரசு நாடாளுமன்றத்திடம் இந்த மசோதாவை நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது.

மருத்துவத் துறையில், குறிப்பாக அவசரச் சேவைகளின் செயல்திறன் குறித்து சுவிஸில் நீண்டகாலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஆரோக்கியக் காப்பீட்டு கட்டண உயர்வுகளுடன் சேர்ந்து, மக்கள் தேவையற்ற அவசர சேவைகளை அதிகம் பயன்படுத்துவதை மருத்துவமனைகள் சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால், அரசு, இப்படியான கட்டணம் அறவிடுவது பிரச்சனையைத் தீர்க்காது, மாறாக மருத்துவ அணுகல் உரிமையை பாதிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறது.

@SwissInfo

Related Articles

Back to top button