Swiss News In Tamil

தங்க விற்பனையில் 74 வயது மூதாட்டியிடம் ஏமாற்றிய வெளிநாட்டு வணிகர் கைது

தங்க விற்பனையில் 74 வயது மூதாட்டியிடம் ஏமாற்றிய வெளிநாட்டு வணிகர் கைது

ஸ்விட்சர்லாந்தின் சூரிச் மாநிலக் காவல்துறை, ஹோர்கனில் (Horgen) புதன்கிழமை நடைபெற்ற ஒரு தங்க விற்பனையை சோதனையிட்ட போது, மோசடி செய்ததற்கான சந்தேகத்தில் ஒரு ஜெர்மன் வணிகரை கைது செய்தது.

இந்த தங்கம் வாங்கும் நிகழ்வு ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு முன் பிரசாரக் கடிதங்கள் (Flyer) மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. போலீசார் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 32 வயது ஜெர்மன் வணிகரும், 74 வயது ஸ்விஸ் நபரும் ஹோட்டலில் பேசிக் கொண்டு வெளியே செல்வதை கவனித்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வணிகர் மூதாட்டியின் பொன் நகைகளை – பல ஆயிரம் சுவிஸ் ஃப்ராங்க்ஸ் மதிப்புள்ளதை – வெறும் 3,000 ஃப்ராங்க்ஸுக்கே வாங்கியிருந்தது தெரிய வந்தது.

Horgen ZH Betrug

அந்த வணிகர் சுவிசில் அதிகாரபுர்வமாக பதிவு செய்யப்படாதவராக இருப்பதும், தங்கம் வாங்கும் போது சட்டப்படி பயன்படுத்தவேண்டிய தரம்தேர்ந்த துல்லியக் காசோலை (geeichte Waage) இல்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறை அவரது வாகனத்தையும், பல ஹோட்டல் அறைகளையும் சோதனையிட்டது. இதன்போது, பல ஆயிரம் ஃப்ராங்கும், யூரோக்களும், கைப்பற்றப்பட்டன. இது தொடர்ப்பில் நகைகளை விற்பனை செய்யும் பொதுமக்களுக்கு சரியான முகவர்கள் அல்லது வணிகர்களை தெரிவுசெய்யுமாறும் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button