Swiss News In Tamil

சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழா 2025

சர்வதேச திரைப்பட விழாவானது 39ஆவது தடவையாக சுவிற்சர்லாந்து நாட்டில் Fribourg (ப்ரீபோர்க்) மாநிலத்தில் 21.03.2025 முதல் 30.03.2025 வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத் திரைப்பட விழாவில் 108 திரைப்படங்கள் தெரிவாகிய நிலையில் எட்டு தமிழ்த்திரைப் படங்கள் Fribourg தமிழ் அமைப்பினரால் முன்மொழியப்பட்டது. அதில் ஈழத்து திரைப்பட இயக்குனர் திரு.மதி சுதா அவர்கள் இயக்கத்தில் உருவான “வெந்து தணிந்தது காடு” திரைப்படமானது முன்னிலை அடிப்படையில் தெரிவானது.

இத்திரைப்படம் முற்றுமுழுதாக iPhone வகை கைத்தொலைபேசியில் காட்சிகள் உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டு தாயகத்தில் வெளியீடு செய்யப்பட்ட திரைப்படமாகும். இத் திரைப்படமானது கலந்துகொண்டவர்கள் மத்தியில் வியப்பையும் ஆச்சரியத்தையும் உண்டுபண்ணியது. இது திரைப்பட வரலாற்றில் இதுவரை கண்டிராத முயற்சியாக பார்க்கப்படுகிறது. இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த பல்லின மக்களும் தத்தமது கருத்துகளை வியப்போடு பகிர்ந்து நின்றமையும் குறுப்பிடத்தக்கது.

இவ் விழாவினை முன்னெடுக்கும் சர்வதேச திரைப்படக் குழுவினரிடம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் Fribourg தமிழ் மன்றம் தாயக திரைப்படம் ஒன்றினை முன்மொழிவு செய்தபோது அத்திரைப்படத்தை போதிய தொழில்நுட்ப தரம் இல்லை என்பதனை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. தற்போது 25 வருடங்களுக்கு பின்னராக தாயக திரைப்படங்கள் பலவற்றை காண்பிக்கும் வாய்ப்பை தந்திருப்பதோடு வெந்து தணிந்தது காடு தெரிவாகி இருப்பதும் சிறப்பாக நோக்கத்தக்கது. இத் திரைப்பட விழாவில் சிங்களமொழிப் படங்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2025 04 07 at 17.10.57 84fe9537 WhatsApp Image 2025 04 07 at 17.10.58 032385cb WhatsApp Image 2025 04 07 at 17.10.55 15ef49f6 WhatsApp Image 2025 04 07 at 17.10.54 7d3fa308

சர்வதேச திரைப்படக் குழுவினருடன் இணைந்து தமிழ் மன்றமான Tamil Forum Fribourg கடந்த 14.03.2025 அன்று பல்பொருள் அங்காடி நிறுவனங்களி்ன் பொதுத்தளமொன்றில் தமிழர் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இதில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகளான சிலம்பாட்டம், பரதநாட்டியம், கோலாட்டம், சிறுவர் நடனம், மங்களவாத்திய இசை என பல்வேறு கலைநிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. நூற்றுக்கணக்கான பன்னாட்டுச்சமூகத்தினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், இவ் விழாவிற்கு அனுசரணை வழங்குகின்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் என பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் Fribourg தமிழர் அமைப்பினரின் தொடர்பாடல்களும் இணைந்த செயற்பாடுகளும் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைப்படங்களாக
“Matangi -MAYA- M.I.A” ,
“Soundless Dance”,
(பிரதீபன் ரவீந்திரனின் ) தமிழ்ப்படம்,
மதி சுதாவின் வெந்து தணிந்தது காடு,
சஞ்சீவாஸ் புஸ்பமாரவின் Peacock Lament,
பிரசன்ன விதன கேயின் Paradise , விசாகேசா சந்திரசேகரனின் மனல், இளங்கோ ராமநாதனின் Tentigo, லோரன்ஸ் வலின் இன் Little Jaffna, ராஜு சமரசிங்கவின் ‘Your Touch Makes Others Invisible’  என்கிற தமிழ் மக்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனை மையமாகக் கொண்ட படம், மற்றும் Legab ( கீர்த்திகன் சிவகுமார்) Crisis (சோபன் வேல்ராஜ்) Is land Story ( பவநீதா லோகநாதன் ) அனுசான் (விபிர்சன் ஞான தீபன்) ஆகிய நால்வர் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. MiA வின் Matangi Maya படம் ஒரு ஆவணப்படமாக இலங்கையின் 30 ஆண்டு கால இன மோதலின் சாட்சிகளை பதிவிட்ட படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை 1500 க்கும் மேற்பட்ட மக்களும் குறிப்பாக சுவிஸ் நாட்டவர்கள் பார்வையிட்டதும் இலங்கையில் இப்படிப்பட்ட ஒரு பிரச்சனையின் பக்கத்தை தாங்கள் அறிந்திருக்கவில்லை என கருத்துக்களைத் தெரிவித்தமையும் திரைப்ப படங்களின் வெற்றியாகும்.

செய்தி ஆக்கம்:-
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பையூர்/சுவிற்சர்லாந்து.

Related Articles

Back to top button