Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தின் மருந்து நிறுவனம் ஒன்று எடுத்த அதிரடி முடிவு

சுவிட்சர்லாந்தின் மருந்து நிறுவனம் ஒன்று எடுத்த அதிரடி முடிவு

சுவிட்சர்லாந்தின் மருந்து நிறுவனம் ஒன்று எடுத்த அதிரடி முடிவு!! சுவிட்சர்லாந்தில் இயங்கிவரும் ஜப்பானிய மருந்து நிறுவனமான Takeda தனது Opfikon கிளையில் 120 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான சட்டரீதியான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. டேகேடாவின் செய்தித் தொடர்பாளர் கீஸ்டோன் செய்திச்சேவைக்கு குறித்த தகவலை உறுதிப்படுத்தினார்.

சுவிட்சர்லாந்தின்
(c) Tekeda Official Web

Opfikon கிளையில் உள்ள சுமார் 1,200 ஊழியர்களுக்கு இந்த திட்டங்களை பற்றி டேகேடா தெரிவித்துள்ளதாக செய்தி தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டார். ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

ஜூன் இரண்டாம் பாதியில் இந்நடவடிக்கையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மருந்து நிறுவனம் மருந்துகளை உருவாக்கி உற்பத்தி செய்வதோடு, 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000க்கும் அதிகமான பணியாளர்களை பணியமர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (SDA)

Related Articles

Back to top button