Swiss News In Tamil
சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு ஈழத்து குயில் சரிகமப வில்
சுவிட்சர்லாந்தில் இருந்து ஒரு ஈழத்து குயில் சரிகமப வில் – தென்னிந்திய ZEE தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடல் போட்டி நிகழ்ச்சியில் ஈழத்து வம்சாவளியை சேர்ந்த, சாரங்கா என்ற இளம் பெண் கலந்துகொண்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து சென்றிருக்கும் குறித்தபெண் சுவிட்சர்லாந்திலும் பல மேடைகளில் பாடி தனது திறமையை வெளிக்காட்டியவர். தென்னிந்தியா வரை சென்று இவர் பாடிய பாடல் நடுவர்களின் பெரும் பாராட்டுதலை பெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் பல திறமையான பாடகர்கள் கலந்துகொள்வதற்கு போட்டி போட்டுவரும் நிலையில் இவருக்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. குறித்த போட்டியில் வெற்றிபெற, எமது ஊடகத்தின் சார்பிலும் சாரங்காவுக்கு வாழ்த்துக்கள்.





