Swiss News In Tamil
லுசேர்னில் பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து.!!
பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து : 10 பன்றிகள் பாதிப்பு– புதன்கிழமை காலை லுசேர்ன் கன்டோன் மென்ஸ்னாவ் நகரில் உள்ள நியூசீபர்க்கில் பன்றிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனத்தில் 10 பன்றிகள் ஏற்றிச்செல்லப்பட்டதாகவும் அதில் ஒரு பன்றி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பன்றியை கால்நடை மருத்துவர் மூலம் காப்பாற்றப்பட்டது. ஏனை 9 பன்றிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தன.
விபத்தின் காரணமாக குறித்த சாலைப்பகுதியி இருமருங்கிலும் அதிகளவான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
ஆதாரம்: Lucerne Police Image source: Lucerne Police





