Saturday, 19 September 2026
Swiss News In Tamil

ஜெனிவாவில் ட்ராம் வண்டியுடன் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஜெனிவாவில் ட்ராம் வண்டியுடன் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர், 1967 இல் பிறந்தவர் என தெரியவந்துள்ளது. ஜெனிவா கன்டோனின், ப்ளைன்பாலைஸ் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஜெனிவாவில்

அவர் டிராம் மூலம் பல மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதாக கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.