Swiss News In Tamil
சூரிச்சில் இளம் பெண் ஒருவரை காணவில்லை : போலீசார் வேண்டுகோள்.!
சூரிச்சில் இளம் யுவதி ஒருவர் கடந்த 17, மார்ச் 21, 2024 வியாழன் முதல் காணவில்லை என சூரிச் நகர காவல்துறை அறிவித்துள்ளது.
குறித்த யுவதி சுமார் 160 சென்டிமீட்டர் உயரம், அடர்ந்து பழுப்பு நிற நேரான தலைமுடி, கருமையான தோல் நிறம், பழுப்பு நிற கண்கள் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
முஜித் என்றழைக்கப்படும் குறித்த பெண் இறுதியாக ஒரு கருப்பு நிற ஜாக்கெட், மற்றும் வெள்ளை காலணிகள் அணிந்திருந்தாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, மார்ச் 21, 2024 அன்றுஇ சூரிச்சில் உள்ள பிரதான ரயில் நிலைய பகுதியில் குறித்த பெண் நின்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஜித் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை வழங்கக்கூடிய எவரும் சூரிச் நகர நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.





