Kestenholz SO அருகே A1 நெடுஞ்சாலையில் எரிந்த டிரக் கன்டோன் சொலுத்தூனில் இன்று வெள்ளிக்கிழமை காலைஇ கெஸ்டன்ஹோல்ஸ் அருகே ஏ ஒன்று நெடுஞ்சாலையில் கனரக வாகனம் ஒன்று கடுமையான தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் காலை 6 மணி 50 நிமிடம் அளவில் பெர்ன் நோக்கி செல்லும் திசையில், கெஸ்டன்ஹோல்சுக்கு அருகிலுள்ள A1 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்பு படை மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது சாலைப்போக்குவரத்து ஒரு பகுதியால் மாற்றிவிடப்பட்டிருந்தது. தீ விபத்துக்கான காரணத்தை சோலத்தூன் கன்டோனல் காவல்துறையின் சிறப்பு நிபுணர்கள் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: சோலோதூர்ன் கன்டோனல் போலீஸ்



