Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 100,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்திற்கான நிகர குடியேற்றம் 98,851 ஆக இருந்தது. இது 2022 உடன் ஒப்பிடும்போது 17,506 நபர்களின் அதிகரிப்கை காட்டுகிறது. குறித்த தகவல் குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தின் புதிய தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான தொழிலாளர் பற்றாக்குறையே இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில், 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் நிரந்தர அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

அவர்களில், இத்தாலியர்கள் 342,454 ஆக காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜேர்மனியர்கள் 326,033 பேரும், போர்த்துகீசியர்கள் 260,462 பேரும் மற்றும் பிரெஞ்சு 165,684 பேரும் உள்தாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், 2022 ல் 41,073 வெளிநாட்டினர் குடியுரிமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button