Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் முதியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சுவிட்சர்லர்நதில் வயது முதிர்ந்தவர்களை இலக்குவைத்து பல்வேறு மோசடிகள் கட்டவிழ்த்து விடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இணைய வழியாக, மின்னஞ்சல் வழியாக, விலை கூடிய பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக என பல்வேறு வழிகளில் வயது முதிர்ந்தவர்கள் ஏமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவிட்சர்லர்நதில், முதியவர்களுக்கு

கடந்த சில ஆண்டுகளில் 55 வயதிற்கு மேற்பட்ட சுமார் 80 விதமானவர்கள் மோசடிகளில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

Pro Senectute Switzerland என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஆய்வு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் வயது முதியவர்களிடம் மேற்கொள்ளப்படும் மோசடிகளினால் வருடாந்தம் 675 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் இழக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொகையானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 400 சுவிஸ் பிராங்குகளாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் பெருந்தொற்றின் பின்னர் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இணையத்தை பயன்படுத்துவதாகவும் இதனால் வயது முதியவர்களை இலகுவில் ஏமாற்றி மோசடி செய்ய முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 விதமான முதியவர்கள் மோசடிகளில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே வயது முதிர்ந்தவர்கள் இணையம் மற்றும் அலைபேசி பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பல்வேறு கும்பல்கள் மோசடிகளில் ஈடுபட்டு பணம் பறித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source:- TamilInfo

Related Articles

Back to top button