Swiss News In Tamil

சுவிஸில் கருணை கொலை செய்யப்பட்ட பெண் சிங்கம்

சுவிட்சர்லாந்தின் பேசலில் வயது முதிர்ந்த சிங்கம் ஒன்று கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.

21 வயதான பெண் சிங்கம் ஒன்று இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேசலின் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த பெண் சிங்கமே இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.

Lioness euthanized in Switzerland

இந்த பெண் சிங்கத்தின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து சென்றதாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இந்த பெண் சிங்கம் பேசல் மிருக காட்சி சாலையில் வாழ்ந்து வந்தது.

இந்த பெண் சிங்கத்திற்கு பிறந்த சிங்கக்குட்டிகள் ஐரோப்பாவின் சில மிருக காட்சி சாலைகளில் வாழ்ந்து வருகின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதலில் நோய்வாய்ப்பட்டு இருந்த இந்த பெண் சிங்கத்தின் உடல் நிலையை அவதானித்த மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் இறுதியில் பெண் சிங்கத்தை கருணை கொலை செய்ய தீர்மானித்தனர்.

Source:- TamilInfo