Local Swiss News

ஆர்பர்க் (Aarburg) காலியான வீட்டின் அடித்தளத்தில் தங்கியிருந்து செம்புத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆர்பர்க் (Aarburg) காலியான வீட்டின் அடித்தளத்தில் தங்கியிருந்து செம்புத் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

4 7

ஆர்காவ் (Aargau) மாகாணம் ஆர்பர்க் (Aarburg) ஓல்ட்னர்ஸ்ட்ராஸ் (Oltnerstrasse) பகுதியில் பலகைகளால் அடைக்கப்பட்டிருந்த காலியான வீடொன்றின் அடித்தளத்தில் (Basement) தங்கியிருந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நவம்பர் 23 திங்கட்கிழமை இரவு 10:30 மணிக்கு மேல், அவ்விடத்திலிருந்து குரல்கள் கேட்டதையடுத்துத் தனியார் பாதுகாப்பு ஊழியர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் கட்டிடத்தைச் சுற்றிவளைத்தனர்.

கைதான 36 வயது போலந்து நாட்டவர் மற்றும் 43 வயது சுவிஸ் நாட்டவரிடமிருந்து திருட்டுக் கருவிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் செம்பு (தாமிரம்) திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆர்காவ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.