Local Swiss News

சூரிச்சில் பாதசாரி மீது கார் மோதல்! – உதவாமல் தப்பிய ஓட்டுநர்

bg1

சூரிச்சில் பாதசாரி மீது கார் மோதல்! – உதவாமல் தப்பிய ஓட்டுநர்…

சூரிச்சில் பாதசாரி ஒருவர் மீது மோதிவிட்டு, அவருக்கு உதவாமல் ஓட்டுநர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை இரவு, 9.16 மணிக்கு சற்று முன்னதாக, சூரிச்சில் உள்ள கனோனென்காஸ் மற்றும் லாகர்ஸ்ட்ராஸ் சந்திப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

bg1

26 வயதுடைய பெண் ஒருவர் மேலும் இருவருடன் பாதசாரிகள் கடக்கும் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது கனோனென்காஸ் பகுதியிலிருந்து வந்த வெள்ளை நிற வாகனம் ஒன்று லாகர்ஸ்ட்ராஸ் நோக்கி திரும்பியுள்ளது.

அவ்வாறு திரும்பியபோது, அந்த வாகனம் பெண் மீது உரசியதில், அவர் தரையில் விழுந்து காயமடைந்துள்ளார்.

ஆனால், வாகனத்தை நிறுத்தி உதவுவதற்குப் பதிலாக, ஓட்டுநர் லாங்ஸ்ட்ராஸ் சுரங்கப்பாதை திசையில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக சூரிச் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த அவசர மருத்துவ சேவையினர், காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி வழங்கியதுடன், மேலதிக கண்காணிப்புக்காக அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.

அவருடன் இருந்த மற்ற இருவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

விபத்து எவ்வாறு இடம்பெற்றது, தப்பிச் சென்ற வாகனம் மற்றும் ஓட்டுநர் தொடர்பான தகவல்கள் குறித்து சூரிச் நகர காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.