மிரண்டு ஓடிய குதிரை… ஆற்றுக்குள் விழுந்த பரபரப்பு! இறுதியில் ஹெலிகாப்டர் மீட்பு!
மிரண்டு ஓடிய குதிரை… ஆற்றுக்குள் விழுந்த பரபரப்பு! இறுதியில் ஹெலிகாப்டர் மீட்பு!

மிரண்டு ஓடிய குதிரை… ஆற்றுக்குள் விழுந்த பரபரப்பு! இறுதியில் ஹெலிகாப்டர் மீட்பு!
சுவிட்சர்லாந்தின் ஸூக் மாநிலத்தில், வறண்டுபோன லோர்ஸ் துணை ஆற்றில் விழுந்த குதிரை ஒன்று, மிகச் சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குச் சற்றுப் பின்னர், பார் நகராட்சியில் உள்ள ஹோல்ஸ்ட்ராஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறுகிய வனப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, குதிரை திடீரென மிரண்டு ஓடியுள்ளது.

இதன்போது, ஒரு சிறிய பாலத்தின் மீது இருந்து தவறி, கீழே இருந்த வறண்ட லோர்ஸ் துணை ஆற்றுக்குள் குதிரை விழுந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, குதிரையில் பயணித்தவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
ஆனால் ஆற்றுக்குள் சிக்கிய குதிரையை மீட்பது மிகப்பெரிய சவாலாக மாறியது.
பார் தீயணைப்புப் படை, ஸூக் தள தீயணைப்புப் படை, தீயணைப்பு ஆய்வாளர், கால்நடை மருத்துவர், பெரிய விலங்குகள் மீட்பு சேவை மற்றும் ஸூக் காவல்துறையின் அவசரப் பணியாளர்கள் என பல்வேறு குழுக்கள் சம்பவ இடத்தில் களமிறங்கின.
குதிரையை வெளியே கொண்டு வருவதற்காக, முதலில் அந்தச் சிறிய பாலத்தையே முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்பின்னர், பெரிய விலங்குகள் மீட்பு சேவையின் உதவியுடன், ஹெலிகாப்டர் மூலம் குதிரை வான்வழியாக பாதுகாப்பாக மேலே தூக்கி மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குதிரை பின்னர் கால்நடை மருத்துவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையின் காரணமாக, சம்பவம் இடம்பெற்ற சாலையின் ஒரு பகுதியும் தற்காலிகமாக மூடப்பட்டது.
ஒரு சாதாரண குதிரைச் சவாரி… எதிர்பாராத விபத்து… இறுதியில் பல்வேறு அவசர சேவைகள் இணைந்து நடத்திய அதிரடி மீட்பு நடவடிக்கை.





