கரின் கெல்லர்-சுட்டர் பெயரில் WhatsApp மோசடி! சுவிஸ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
கரின் கெல்லர்-சுட்டர் பெயரில் WhatsApp மோசடி! சுவிஸ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

கரின் கெல்லர்-சுட்டர் பெயரில் WhatsApp மோசடி! சுவிஸ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
சுவிட்சர்லாந்தில் WhatsApp மூலம் பரவி வரும் புதிய முதலீட்டு மோசடி குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
இந்த முறை, கூட்டாட்சி மன்ற உறுப்பினர் கரின் கெல்லர்-சுட்டர் பெயரும் புகைப்படமும் மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் WhatsApp செய்திகளில், பெர்னில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சர்ச்சை தொடர்பான போலி செய்தி அனுப்பப்படுகிறது.
அதில் இருக்கும் Link-ஐ கிளிக் செய்தால், ஜெர்மன் கூட்டாட்சி நிர்வாகத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி அரசாங்க இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறீர்கள்.
அங்கு அரசாங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி முதலீட்டு தளம் ஒன்று விளம்பரப்படுத்தப்படுகிறது.
மேலும், தினமும் CHF 1,000 வரை வருமானம் கிடைக்கும் என்றும், முதல் மாதத்திலேயே ஆயிரக்கணக்கான பிராங்குகள் லாபம் பெறலாம் என்றும் மோசடிக்காரர்கள் ஆசை காட்டுகின்றனர்.
ஆனால், இது முற்றிலும் போலியானது என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
சில மோசடிகளில் ஆரம்ப முதலீடாக வெறும் CHF 200 மட்டுமே கேட்கப்பட்டு, பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்து அதிக பணம் முதலீடு செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கணக்குகளில் லாபம் அதிகரிப்பது போல காட்டி, மேலும் பணம் செலுத்த வைப்பதும் இந்த மோசடியின் ஒரு பகுதியாக இருக்கலாம்.
இதுபோன்ற செய்தி அல்லது Link வந்தால் அதைத் திறக்காமல் உடனடியாக Report செய்து Delete செய்யுங்கள்.
மேலும், ஏற்கனவே பணத்தை இழந்திருந்தால், உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… அதிக லாபம், குறைந்த முதலீடு, அரசாங்கத்தின் பெயர்—இவை அனைத்தும் மோசடியின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்.





