Swiss News In Tamil

கட்சியில் நீக்கம்… ஆனால் பதவியில் தொடரும் பெரியார்ட் – பெர்னில் பரபரப்பு!

7A 99

கட்சியில் நீக்கம்… ஆனால் பதவியில் தொடரும் பெரியார்ட் – பெர்னில் பரபரப்பு!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பெர்ன் நகர மன்றத்தில் உள்ள FDP நாடாளுமன்றக் குழு, தனது உறுப்பினரான ஷாண்டல் பெரியார்டை Chantal Perriardகுழுவிலிருந்து நீக்கியுள்ளது.

குழுவுடன் இணைந்து செயல்படுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முடிவு தனது நகர மன்ற உறுப்பினர் பதவியை பாதிக்காது என்றும், தான் தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகவும், FDP கட்சியின் உறுப்பினராகவும் செயல்படுவேன் என்றும் ஷாண்டல் பெரியார்ட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

7A 99

மேலும், தன்னை நீக்கியதற்கான குறிப்பிட்ட காரணங்கள், எழுத்துப்பூர்வ விளக்கம் மற்றும் செயல்முறை ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் ஊடகங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து தற்போது அமைதியாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், தரமான கல்வி, வலுவான பொருளாதாரம், பெர்ன் நகர வளர்ச்சி மற்றும் உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் பெரியார்ட் கூறியுள்ளார்.

இதனால் பெர்ன் நகர அரசியலில் புதிய திருப்பம் உருவாகியுள்ள நிலையில், இந்த விவகாரம் அடுத்த கட்டத்தில் எந்த திசையில் செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *