Swiss News In Tamil

சுவிஸில் நாடுகடத்தல் உத்தரவுகள் : கன்டோன்கள் இடையே புதிய விவாதம்.!!

சுவிஸில் நாடுகடத்தல் உத்தரவுகள் : கன்டோன்கள் இடையே புதிய விவாதம்.!!

சுவிட்சர்லாந்தின் வலதுசாரி அரசியல் கட்சியான UDC கடந்த சில ஆண்டுகளாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை நாடுகடத்தும் நடைமுறைகள் பற்றி கூட்டாட்சி அரசிடம் தெளிவான விளக்கம் கோரித்து வருகிறது. கட்சியின் முன்னாள் தலைவர் டோனி புருன்னர் இந்த முன்மொழிவை முன்வைத்தார். தற்போது அதை நாடாளுமன்ற குழுத் தலைவர் தோமஸ் ஐஷி தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார். நாடுகடத்தல் உத்தரவுகள் எத்தனை அளவுக்கு நடைமுறையில் செயல்படுகின்றன என்பதே இந்த விவாதத்தின் மையப் பொருள்.

முதன்முறையாக கடந்த ஆண்டு முழுமையான புள்ளிவிவரங்களை கூட்டாட்சி அரசு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கன்டோன்களிலும் எத்தனை நாடுகடத்தல் உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் அவற்றில் எத்தனை உண்மையில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைக் கணக்குப்படுத்து வேண்டும் என தோம ஐஷி மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

Blick வெளியிட்ட தரவுகளின் படி, 2016ஆம் ஆண்டில் நாடுகடத்தல் சட்டம் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறை இதுவரை அமலிலில்லை. உதாரணமாக, Zug, Glarus மற்றும் Appenzell ஆகிய கன்டோன்களில் வழங்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது, ஆனால் இங்குள்ள எண்ணிக்கை குறைவானது. பாசல் நகரில் 97%, சோலோதுர்னில் 96%, டிசினோவில் 85.8%, பெர்னில் சுமார் 77% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

N3a

ரோமான்டி பகுதி முற்றிலும் வேறுபட்ட நிலையை காட்டுகிறது. Vaud மற்றும் Genève கன்டோன்களில் சுமார் 45% மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளன. Neuchâtel மற்றும் Jura பகுதிகளில் இந்த விகிதம் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. இந்த தரவுகள் 2024 முடிய செயல்படுத்தப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை.

சுவிஸ் அரசியலில் வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்பான விவாதம் அடிக்கடி எழும் போது, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகள் குறித்து சுவிஸ் வலதுசாரி கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் தருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button