Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

2025 செப்டம்பர் மாத இறுதியில், சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்கள் 6,562,600 ஆக இருந்தன என்று நாட்டின் மத்திய அரசாங்க புள்ளிவிவர அலுவலகம் (Federal Statistical Office) தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் டந்த ஆண்டைவிட 0.9% அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதில் பயணிகள் கார்கள் (Passenger cars) சுமார் மூன்றில் மூன்றுபங்கை வகிக்கின்றன, மொத்தம் 4,829,500 வாகனங்கள், இது கடந்த ஆண்டைவிட 33,400 (0.7%) அதிகம்.

மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் அதிகரித்துவருகின்றன என்றாலும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களே இன்னும் பெரும்பான்மையாக உள்ளன. மொத்த வாகனங்களில்:

  • 58.7% பெட்ரோல்,
  • 24% டீசல்,
  • 11.9% ஹைப்ரிட் (2024 இல் 9.6%),
  • 5.2% மின்சாரம் (2024 இல் 4.2%) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கான்டன்களுக்கு (cantons) குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.

  • சூக் (Zug) கான்டன் மின்சார வாகனங்களின் மிக உயர்ந்த விகிதத்துடன் (11.3%) முதலிடத்தில் உள்ளது.
  • அதனை சூரிச் (Zurich) (6.6%) பின்தொடர்கிறது.

பிரஞ்சு மொழிப் பகுதிகளில்,

  • வோட் (Vaud) (5.4%) முதலிடத்தில்,
  • பின்னர் ப்ரிபூர்க் (Fribourg) (5%),
  • வலெய்ஸ் (Valais) (4.3%),
  • நூஷாத்தெல் (Neuchâtel) மற்றும் ஜுரா (Jura) (3.8%) வருகின்றன.
  • ஜெனீவா (Geneva) 3.6% விகிதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்து ரயில்வே நாடாக அறியப்பட்டாலும், கார்கள் இன்னும் போக்குவரத்தில் முக்கிய ஆதிக்கம் செலுத்துகின்றன என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Back to top button