Swiss News In Tamil

சுவிஸ் வைர வியாபாரி கடத்தப்பட்டு மிரட்டல்: போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி கைது

சுவிஸ் வைர வியாபாரி கடத்தப்பட்டு மிரட்டல்: போலீஸ் அதிகாரி மற்றும் மனைவி கைது

தென்னாப்பிரிக்கா கௌடெங் மாகாணத்தில் உள்ள டார்ல்டன் காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜெண்ட் ஜான் மோட்லாடிலை (John Motladile) மற்றும் அவரது மனைவி யோவோன் (Yvonne) ஆகியோர், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞரை கடத்தி, பணம் பறித்த குற்றச்சாட்டில் கெம்ப்டன் பார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செய்தியை உள்ளூர் இணைய ஊடகமான EDW வெளியிட்டுள்ளது.

வைர வியாபாரம் பெயரில் கண்ணி

சுவிஸ் இளைஞர்  ஒரு வைர வியாபாரி. கடந்த வாரம் Facebook-ல் பார்த்த ஒரு போலி வியாபார வாய்ப்புக்காக ஜொஹன்னஸ்பர்க் சென்றிருந்தார். அவர் ராண்ட்‌ஃபொண்டெய்ன் (Randfontein) பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்டார். அங்கு அவர் இரண்டு அசல் வைரங்களை வாங்குவதாக நினைத்திருந்தார்.

ஆனால், அந்த சந்திப்பில் திடீரென நுழைந்த (John Motladile) மோட்லாடிலை, இளைஞரை மறித்து “சுமார் 10,000 சுவிஸ் ஃப்ராங்க் செலுத்தாவிட்டால் கைது செய்வேன்” என்று மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுவிஸ் வைர வியாபாரி கடத்தப்பட்டு மிரட்டல்

காவல் துறை வாகனத்தில் கட்டாயம் அழைத்துச் சென்றனர்

அதன்பின், பாதிக்கப்பட்டவர் காவல் துறையின் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு, ஒரு உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர், அந்த அதிகாரி மற்றும் மனைவிக்காக உணவு, பானங்களை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டார்.

இளைஞர் ஏற்கனவே சுமார் 2,300 சுவிஸ் ஃப்ராங்க் செலுத்தியிருந்தும், அந்த தம்பதியினர் மேலும் பணம் கோரியதாக விசாரணையில் தெரிவிக்கிறது.

சுவிஸில் உள்ள அவரது குடும்பம் சந்தேகத்துக்கிடமான நிலையை உணர்ந்து இன்டர்போல்-க்கு தகவல் கொடுத்தது. அதன்பின் தென்னாப்பிரிக்க உளவுத்துறை விரைந்து செயல்பட்டு, இளைஞரை விடுவித்தது. அடுத்த நாளே, பாதிக்கப்பட்டவர் அந்த சார்ஜெண்டையும் அவரது மனைவியையும் அடையாளம் காட்டினார். உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, மோட்லாடிலை மற்றும் அவரது மனைவி இருவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

@மூலம் EDW

Related Articles

Back to top button