Swiss News In Tamil

பெட்ரோல் பங்க் கொள்ளையன் கைது – நகைக் கடை கொள்ளையுடன் தொடர்பு

பெட்ரோல் பங்க் கொள்ளையன் கைது – நகைக் கடை கொள்ளையுடன் தொடர்பு

 Graubünden கன்டோனின் ஓபரெங்காடின் (Oberengadin) பகுதியில், புதன்கிழமை பிற்பகல் ஒரு பெட்ரோல் பங்க் கடையில் துணிகரமான கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது.  Graubünden கன்டோன் காவல்துறையினர், அதே நாளில் குற்றவாளியை கைது செய்தனர்.

இந்தக் கொள்ளையை நடத்தியவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு சமேடன் (samedan) பகுதியில் ஒரு நகைக் கடையில் கொள்ளையடித்த அதே நபர் என்பது தெரியவந்துள்ளது.

Kapo GR
Foto

இந்த முறையும், அவர் ஒரு பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தை கைப்பற்றி தப்பி ஓட முயன்றார். (Poschiavo) போஷியாவோவில், சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குள், இத்தாலிக்கு ரயில் மூலம் தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் அவர் கைது செய்யப்பட்டார்.

 Graubünden அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்தக் குற்றவாளிக்கு எதிராக விசாரணைக் காவலை கோரியுள்ளது, மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

@Kapo GR

Related Articles

Back to top button