Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் 25 ஆண்டுகளாக வெளியான “20 Minuten” பத்திரிகை நிறுத்தம்

சுவிட்சர்லாந்தில் 25 ஆண்டுகளாக வெளியான “20 Minuten” பத்திரிகை நிறுத்தம்

சுவிட்சர்லாந்தில் 25 ஆண்டுகளாக இலவசமாக வெளியான “20 Minuten” பத்திரிகையின் பயணம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் ரயில்களில், பஸ்களில் பயணிக்கும் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருந்த இந்த சிறு பத்திரிகை, ஒவ்வொரு காலையும் சுவிட்சர்லாந்து மக்களின் கையில் இருந்தது. பல ஆண்டுகள் வரை இது நாட்டின் மிக அதிகம் வாசிக்கப்பட்ட பத்திரிகையாக இருந்தது.

20min
@KeystoneSDA

ஆனால் 2022ம் ஆண்டு “Schweiz am Wochenende” பத்திரிகை அதன் வாசகர்களை மிஞ்சி முதலிடம் பிடித்தது. தற்போதைய நிலையைப் பொருத்தவரை, பெரும்பாலான பயணிகள் தங்கள் நேரத்தை செல்போன்களில் செலவிடுகிறார்கள். செய்திகளை இணையதளங்களிலேயே படிக்கிறார்கள். இதனால் “20 Minuten” பத்திரிகையை மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button