Swiss News In Tamil

வெளிநாட்டில் வாழும் சுவிஸ் பிரஜைகள் எண்ணிக்கை உயர்வு

2024-ஆம் ஆண்டு, 13,300 சுவிஸ் பிரஜைகள் தாய்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், வெளிநாட்டில் வாழும் சுவிஸ் பிரஜைகளின் மொத்த எண்ணிக்கை 8,26,700 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒன்றிற்கும் மேற்பட்ட நாட்டு குடியுரிமையை கொண்டுள்ளனர் என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மொத்தமாக, வெளிநாட்டில் வாழும் சுவிஸ் பிரஜைகளில் 64 வீதமானவர்கள், ஐரோப்பாவில் வாழ்கின்றனர்.

பிரான்ஸ் – 2,12,100
ஜெர்மனி – 1,01,000
இத்தாலி – 52,600
இங்கிலாந்து – 40,900
ஸ்பெயின் – 27,300

சுவிஸ் பிரஜைகள்

ஐரோப்பாவைத் தவிர, 2,96,200 சுவிஸ் பிரஜைகள் உலகின் பிற பகுதிகளில் வசிக்கின்றனர்.

வட அமெரிக்கா – 16%
லத்தீன் அமெரிக்கா & கரீபியன் – 7%
ஆசியா – 7%
ஓஷியேனியா (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்டவை) – 4%
ஆப்ரிக்கா – 2%

ஐரோப்பாவுக்கு வெளியே மிகப்பெரிய ஸ்விஸ்ஸ் சமூகமானது அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு 84,700 சுவிஸ் பிரஜைகள் வாழ்கின்றனர். கனடா மற்றும் அவுஸ்திரேலியா அடுத்த இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.

வெளிநாட்டில் வாழும் ஸ்விஸ்ஸர்களில், 18 வயதுக்குட்பட்டவர்களில் 85%, 18-64 வயது பிரிவில் 75%, மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 65% பேர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர்.

ஸ்விஸ்ஸர்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிவருகின்றனர், குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓஷியேனியாவில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related Articles

Back to top button