Swiss News In Tamil

சுவிஸில் புதிய அமைச்சராக மார்டின் ப்பிஸ்டர் பெயரிடப்பட்டுள்ளார்

சுவிஸில் புதிய அமைச்சராக மார்டின் ப்பிஸ்டர் பெயரிடப்பட்டுள்ளார்

சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் புதிய அமைச்சராக மத்திய கட்சியின் மார்டின் ப்பிஸ்டர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 134 வாக்குகளுடன் வெற்றி பெற்ற அவர், வியோலா அம்ஹெர்டுக்கு பதிலாக பதவி வகிக்க உள்ளார்.

சுவிட்சர்லாந்து அமைச்சரயைில்  4 ஜெர்மன் பேசும் உறுப்பினர்கள்,  2 பிரஞ்சு பேசும் உறுப்பினர்கள்,  1 இத்தாலிய மொழிப் பேசும் உறுப்பினர் என பதவி வகிக்கின்றனர்.

சுவிஸில்

எனினும், பாலின சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – இனி இரண்டே பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமைச்சரவையில் கரின் கெல்லர்-சுட்டர் மற்றும் எலிசபெத் போம்-ஷ்னைடர் ஆகியோர் பெண் அமைச்சர்களாக கடமையாற்றுகின்றனர்.

மத்திய கட்சி தனது உத்தியோகப்பூர்வ பட்டியலில் எந்த ஒரு பெண்களையும் சேர்க்கவில்லை என கட்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சோஷலிஸ்ட் மற்றும் பசுமை கட்சிகள் அமைச்சரவையில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button