Swiss News In Tamil
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் சுவிட்சர்லாந்து பின்னடைவு
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் சுவிட்சர்லாந்து பின்னடைவை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிதிச் சலவை, தனிப்பட்ட ஊழல் மோசடிகள், மோசடிகளை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் சுவிட்சர்லாந்து உரிய முறையில் ஆதரவு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து பொதுத்துறையில் நிலவும் ஊழல் மோசடிகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. உலக அளவில் பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.







