Swiss News In Tamil

வாழை மரங்களை பயிரிட தயாராகும் சுவிட்சர்லாந்து

வாழை மரங்களை பயிரிட தயாராகும் சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒலிவ், வாழை பயிரிடும் நாள் தொலைவில் இல்லை – காலநிலை மாற்றம் விவசாயத்தை மாற்றுகிறது

சுவிட்சர்லாந்தின் காலநிலை மாறி வருகிறது. வெப்பமான, வறண்ட கோடைகாலங்கள் அதிகரித்துவருவதால், இனி வாழைப்பழம் மற்றும் ஒலிவ் மரங்கள் நாட்டில் பயிரிடப்படலாம் என்ற சாத்தியம் உருவாகியுள்ளது. இதுவரை “சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட வாழைப்பழம் என்பது வேடிக்கையான அல்லது சாத்தியமில்லா ஒன்றாக தோன்றினாலும் அது விரைவில் நிஜமாக மாறலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

புதிய பயிர்களுக்கு வாய்ப்பு

Agroscope ஆராய்ச்சி நிறுவனத்தின் “காலநிலை மற்றும் வேளாண்மை” பிரிவு துணைத் தலைவர் பியர்லுயிஜி கலாங்கா இதுபற்றி குறிப்பிடுகையில்,

“ஒலிவ் மரங்கள் சுவிட்சர்லாந்தின் சூடான, வறண்ட காலநிலைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளோம். எதிர்காலத்தில் வாழை, குவினோவா, பக்க்வீட் போன்ற பயிர்களையும் பயிரிட முடியும். பல தாவரங்கள் இங்கு சுவாரஸ்யமான வாய்ப்புகளை உருவாக்கும்.”

சுவிட்சர்லாந்தின் குளிர்ந்த குளிர்காலம், ஒலிவ் பயிர்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கக்கூடும். காரணம், தெற்கு ஐரோப்பாவில் ஒலிவ் மரங்களுக்கு பரவக்கூடிய சில நோய்கள், சுவிட்சர்லாந்தின் குளிரில் பரவாது.

இதற்கான முதல் முயற்சிகளும் தொடங்கியுள்ளன என கலாங்கா விளக்குகிறார். மேலும் சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதியான ரோமாண்டி பகுதியில் ஒலிவ் பயிரிடுதலை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளோம்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

1649cb92 9b4f 43a9 bae1 4a68433de2a5
@AI

காலநிலை மாற்றம் – விவசாயத்திற்கு சவால்களும், வாய்ப்புகளும்

இதே நேரத்தில், ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் பயிரிடப்படும் பாரம்பரிய பயிர்களும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகின்றன. வெப்பநிலை அதிகரிப்பதால்,  பயிர்களின் வளர்ச்சி வேகம் அதிகரித்து, அறுவடை நேரம் மாறுகிறது. எனினும், மிகப் பெரிய சவால் அதிகரித்துவரும் அதிதீவிர வானிலை நிகழ்வுகள் என்பதே.

கடந்த சில ஆண்டுகளில் வறட்சி மற்றும் கடும் வெப்பம் விவசாயிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு அதிக மழை பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. 2021இல் ஏற்பட்ட கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை, சுவிஸ் விவசாயத்திற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.

எதிர்கால சுவிஸ் வேளாண்மை

காலநிலை மாற்றம் சவால்களை ஏற்படுத்தினாலும், அதே சமயம் புதிய பயிர்களுக்கு வாய்ப்புகளையும் திறக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி, வாழைப்பழம், ஒலிவ், குவினோவா போன்ற பயிர்கள் விரைவில் “Made in Switzerland” என்ற முத்திரையுடன் உலக சந்தையில் தோன்றும் நாள் தொலைவில் இல்லை எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button