Saturday, 19 September 2026
Swiss News In Tamil

ஆர்காவ் கன்டோனில் பள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து..!!

ஆர்காவ் கன்டோனில் பள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து..!! செவ்வாயன்று, ஆர்காவ் கன்டோனின் லென்ஸ்பர்க் இல் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு மாணவர்களும் ஆசரியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதன்போது பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

செவ்வாய்கிழமை, மதியம் 1 மணிக்கு முன்னதாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆர்காவ் கன்டோனல் போலீசார் தெரிவிக்கின்றனர்.

ஆர்காவ் கன்டோனில்

பள்ளி கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். உள்ளூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்ததால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

புகை மூட்டத்தால், பள்ளிக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டு, பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் சொத்து சேதம் இன்னும் தெரியவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆர்காவ் கன்டோனல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(c) zueritoday.ch