Saturday, 19 September 2026
Swiss News In Tamil

ஓநாய்களுக்கு எதிராக பசுவின் சடலத்துடன் விவசாயி போராட்டம்

ஓநாய்களுக்கு எதிராக பசுவின் சடலத்துடன் விவசாயி போராட்டம் கன்டோன் வோட், Bioux நகரில் இல், ஓநாய் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கிராமத்தின் நடுவில் ஒரு விவசாயி தனது டிராக்டரில் இறந்த பசுவைத் தொங்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஓநாயால் கொல்லப்பட்டதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்திய பசு, புதன்கிழமை பிற்பகல் பிரதான வீதியோரமாக காட்சிப்படுத்தப்பட்டு, பொலிசார் தலையிடும் வரை போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த காட்சி குடியிருப்பாளர்களையும் வழிப்போக்கர்களையும் தொந்தரவு செய்தது.

ஓநாய்களுக்கு
(c) 20mins

சிலர் ஓநாய்களால் கால்நடைகளை இழந்த விவசாயியின் விரக்திக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். மற்றவர்கள் இந்த செயலை அமைதியற்றதாகக் விமர்சனம் செய்தார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, வோட் மாகாணத்தில், குறிப்பாக வடக்குப் பகுதிகள் மற்றும் வாலி டி ஜூக்ஸில், மந்தைகள் மீது கிட்டத்தட்ட 120 ஓநாய் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

SOURCE 20Mins